:: wikimiki.org ::
| பெரு வெடிப்புக் கோட்பாடு |
பெரு வெடிப்புக் கோட்பாடு
பெரு வெடிப்புக் கோட்பாடு (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும். இதுவரை முன்வைக்கப்பட்ட அண்டத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது இதுவே.
அடிப்படைகள்
பெரு வெடிப்புக் கோட்பாடானது 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெளியான இரண்டு முக்கிய கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் உருவானது. ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச் சார்புக் கோட்பாடு (General Theory of Relativity). மற்றது அண்டவியற் கொள்கை (Cosmological Principle). பொதுச் சார்புக் கோட்பாடு, அண்டவெளியில் உள்ள பொருட்களிடையே காணப்படும் ஈர்ப்புத் தோற்றப்பாடானது மேற்படி பொருட்களின் திணிவுகளினால் பாதிக்கப்பட்டு வெளியும் (space), காலமும் (time) திரிபடைந்த ஒரு நிலையே என்று கூறுகின்றது. அண்ட வெளியில் உள்ள பொருள்கள் வெளியில் ஒரே சீராகப் பரவியிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டதே அண்டவியற் கொள்கை.
பெரு வெடிப்பு
அண்டவியற் கொள்கை
பெரு வெடிப்புக் கொள்கையின்படி அண்ட வெளியில் உள்ள பொருட்கள் அனைத்தும் 12 தொடக்கம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய அளவினதான தீப்பிழம்பாக இருந்திருக்கிறது. இன்று எங்களால் அறியப்படுகின்ற அண்டத்திலுள்ள பொருட்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர்கள் அளவுக்குள் அடங்கியிருந்திருக்கும் எனக் கணிப்பிடப்படுகின்றது. இத் தீப்பிழம்பானது இன்று அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தினால் மிக வேகமாக விரிவடையத் தொடங்கிற்று. இதுவே பெரு வெடிப்பு (Big-Bang) எனப்படுகின்றது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இவ் விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வாயுக்கள் ஆங்காங்கே நட்சத்திரக் கூட்டங்களாக உருவாகியிருக்ககூடும் என அவர்கள் கூறுகிறார்கள். பல பில்லியன் ஆண்டுகள் கழிந்த பின்னும் அண்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்றும் அண்டவெளி முழுதும் ஒரே சீராகப் பரவிக் காணப்படும் நுண்ணலைக் கதிர் வீச்சானது மேற்குறிப்பிட்ட பெரு வெடிப்பின்போது வெளியான கதிர் வீச்சின் எச்சங்களே என்று கருதப் படுகின்றது.
இவற்றையும் பார்க்கவும்
- அண்டவியல்
பகுப்பு:அண்டவியல்
அண்டம்அணுவிலும் மிகச்சிறிய துகள்களையும் மிகவும் பெரிய நட்சத்திரங்கள், கோடிக் கணக்கான நட்சத்திரங்களையும் வேறு பொருட்களையும் உள்ளடக்கிய நட்சத்திரக் கூட்டங்கள் போன்ற நம்மைச் சூழவுள்ள அனைத்தையும் உள்ளடக்கியதே அண்டம் ஆகும்.
12 தொடக்கம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிகமிக அதிகமான அடர்த்தியும், வெப்பநிலையையும் கொண்டிருந்த கோளம் வெடித்துச் சிதறியதன் மூலம் அண்டம் உற்பத்தியானதாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தில் இன்று நாம் பார்வைக்கு எட்டிய அண்டப்பகுதி எல்லாம் சில மில்லிமீட்டர் விட்டத்துக்குள் அடங்கி விட்டிருக்கும் என்று சொல்லப்படுகின்றது.
பகுப்பு:அண்டவியல்
ja:宇宙
ko:우주
ms:Alam Semesta
simple:Universe
பில்லியன்மேற்கத்திய எண்முறையில் பில்லியன் என்பது ஆயிரம் மில்லியனைக்(1000 X 1000 X 1000)குறிக்கும். இந்திய எண்முறைப்படி 100 கோடி ஒரு மில்லியனுக்குச் சமமானது. ஒரு பில்லியன் 1,000,000,000 என எழுதப்படுகிறது. அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு பில்லியன் 109 என எழுதப்படும்.
Category: எண்
Category: அளவை
அடர்த்திஒரு பதார்த்தத்தின் அடர்த்தி என்பது அப் பதார்த்தத்தின் ஒரு கன அலகின் திணிவு ஆகும். அடர்த்தி பின்வரும் சமன்பாட்டினால் குறிக்கப்படும்.
: பதார்த்தத்தின் அடர்த்தி = பதார்த்தத்தின் திணிவு / பதார்த்தத்தின் கன அளவு
திணிவு கிராம் அலகிலும், கன அளவு கன சதம மீட்டர் அலகிலும் இருக்கும்போது அடர்த்தி கிராம்/கன சதம மீட்டர் அல்லது கிராம்/சதம மீட்டர் 3 அலகில் இருக்கும். சுருக்கமாக கி/சமீ3 என எழுதுவது வழக்கம்.
பல்வேறு பதர்த்தங்களின் அடர்த்திகள்:
இவற்றையும் பார்க்கவும்
- தன்னீர்ப்பு
பகுப்பு:இயற்பியல்
நுண்ணலை
நுண்ணலைகள் 30 சென்டி மீட்டரிலிருந்து ஒரு மில்லி மீட்டர் அலை நீளம் வரை இருக்கும். இவ்வலைகள் நெடுந்தொலைவு தொலைப்பேசி இணைப்புகளுக்கும், நுண்ணலை அடுப்புகள் மூலம் உணவு சமைக்கவும் பயன்படுகிறது.
பகுப்பு:அண்டவியல்பகுப்பு:இயற்பியல் Kurt cobain: Kurt Cobain
zawory metalowe godwka otyo edinburgh hotel WARSAW HOTELS
|
|
|
| :: RELATED NEWS :: |
Maincourt-sur-Yvette
Catégorie:Commune des Yvelines
Dampierre-en-Yvelines est une commune française, située dans le département des Yvelines et la région Île
|
|
Dampierre (Yvelines)
Catégorie:Commune des Yvelines
Dampierre-en-Yvelines est une commune française, située dans le département des Yvelines et la région Île
|
Le Temps
Le Temps est un quotidien suisse édité à Genève. Il résulte de la fusion du Journal de Genève et du Nouveau Quotidien. Depuis sa première édition le 18 mars 1998, 2300 numéros avaient paru au
|
|
Virgile Rossel
Virgile Rossel est un homme politique suisse né à Tramelan, le 9 mars 1858 et mort à Lausanne, le 29 mai 1933. Il était à la fois un juriste, un historien, un poète, un romancier, un juge, un professeur et un homme politique.
Virgile Rossel était, semble-t-il, un descendant d'émigrés français. Il a obtenu la maturité litt
|
|